ETV Bharat / city

பயணிகள் இல்லாமல் 50 உள்நாட்டு விமானங்கள் ரத்து

author img

By

Published : Apr 28, 2021, 11:46 AM IST

சென்னை: கரோனா இரண்டாம் அலையின் கடுமையான தாக்கத்தால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்றும் போதிய பயணிகள் இல்லாமல் 50 உள்நாட்டு விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மாநகரம் அதைச் சுற்றியுள்ள புறநகா்ப் பகுதிகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதையடுத்து இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

அதைப்போல் விமான பயணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை உள்நாட்டு விமான பயணிகளுக்கும் கரோனா மருத்துவப் பரிசோதனை சான்றிதழ், வெளிமாநிலப் பயணிகளுக்கு கட்டாய இ-பாஸ் முறை போன்றவைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாமல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத் செல்லும் ஐந்து விமானங்கள், டெல்லி, கோவை, பெங்களூருவுக்குச் செல்லும் தலா மூன்று விமானங்கள், மும்பைக்குச் செல்லும் 2 விமானங்கள், மதுரை, கொல்கத்தா, கொச்சி, ராஞ்சி, அகமதாபாத், சிலிகுரி, இந்தூா், அந்தமான், கோவா உள்ளிட்ட 25 புறப்படும் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

அதைப்போல் இந்த நகரங்களிலிருந்து சென்னைக்குத் திரும்பிவரும் 25 விமானங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. எனவே இன்று ஒரேநாளில் சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் 50 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

நேற்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் 42 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. இன்று அது 50 உள்நாட்டு விமானங்களாக அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் பயணிகள் எண்ணிக்கை நேற்றைவிட இன்று அதிகரித்துள்ளது.

நேற்று சென்னைக்கு வருகை பயணிகள் மூன்றாயிரம், புறப்பாடு பயணிகள் நான்காயிரம் மொத்தம் ஏழாயிரமாக இருந்தது. இன்று சென்னைக்கு வருகை பயணிகள் மூன்றாயிரத்து 500 ஆகவும், புறப்பாடு பயணிகள் ஆறாயிரத்து 500 ஆகவும் உள்ளது.

இதில் புறப்பாடு பயணிகளில் கொல்கத்தா, கவுகாத்தி, பாட்னா, புவனேஸ்வா் போன்ற வடமாநிலங்களுக்குச் செல்லும் விமானங்களில் மட்டும் கூட்டம் அதிகரித்துள்ளது.

கரோனா பீதியால் இங்குள்ள வடமாநிலத்தவா்கள் பலா் சொந்த ஊா் திரும்புவதால் புறப்பாடு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் சென்னைக்கு வருகை பயணிகளில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

அதைப்போல் சா்வதேச விமான நிலையத்தில் ஏற்கனவே துபாய், சாா்ஜா, அபுதாபி, லண்டன், நியுயாா்க், பாரீஸ் உள்ளிட்ட பல விமானங்கள் ரத்தாகியுள்ளன. இந்நிலையில் இன்று சிங்கப்பூா், கோலாலம்பூா் சிறப்பு விமானங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

இதனால் சென்னை விமான நிலையம் தொடா்ந்து வெறிச்சோடி காணப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.