ETV Bharat / city

5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 5pm

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்தி சுருக்கம்

5 மணி செய்தி சுருக்கம்
5 மணி செய்தி சுருக்கம்
author img

By

Published : Aug 1, 2021, 5:09 PM IST

1.தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு எப்போது?: மா.சு பதில்

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு மத்தியக் குழுவின் ஆய்வுக்குப் பின்னரே அறிவிக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

2.பக்கா பட்ஜெட் ப்ளான் - அமைச்சர், அலுவலர்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ்!

விவசாயிகள் மற்றும் துறை வல்லுநர்கள், பல்வேறு சங்கப் பிரநிதிகளைக் கலந்தாலோசித்து மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பயன்தரத் தக்க வகையில் இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையும் விவசாயத் துறைக்கான முதல் தனி நிதிநிலை அறிக்கையும் அமைய வேண்டும் என அமைச்சர் மற்றும் அரசு உயர் அலுவலர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

3.மேகதாதுவில் நிச்சயம் அணை கட்ட முடியாது - பொன்.ராதாகிருஷ்ணன்

மேகதாதுவில் கர்நாடகா அரசால் அணை கட்ட முடியாது எனவும், அதனை அனுமதிக்க மாட்டோம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

4.TNPL 2021: சேலம் ஸ்பார்டன்ஸ் vs திருச்சி வாரியர்ஸ்; சேலம் பேட்டிங்

டிஎன்பில் தொடரில் சேலம், திருச்சி அணிகளுக்கு இடையிலான 18ஆவது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

5.சம்பளப்பணம் வரவு செய்யப்படும்? - ஐசிஐசிஐ அதிரடி

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட இனி சம்பளப் பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.

6.அசாம் முதலமைச்சருக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற தயார் - மிசோரம் அரசு

அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை திரும்பப் பெற தயாராக உள்ளதாக மிசோரம் தலைமைச் செயலாளர் லால்நுன்மாபியா சுவாங்கோ தெரிவித்துள்ளார்

7.நண்பர்கள் தினம்: உயிரை கொடுத்த கென் டேலி!
நண்பர்கள் தினமான இன்று ‘இன் ப்ரூஜ்ஸ்’ என்னும் ஆங்கில திரைப்படத்தில் வரும் கென், ரேய் கதாபாத்திரங்களின் நட்பு குறித்து காண்போம்.

8.அழகிய கண்ணே: ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் ஆர்யா

’அழகிய கண்ணே’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா நாளை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

9.கிரெடிட் கார்டு மோசடி - இருவருக்கு சிறை

சென்னையில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி கிரெடிட் கார்டு மூலம் பணம் மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
10.'கற்போம் எழுதுவோம் இயக்கம்' மூலம் 3,21,539 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு

தமிழ்நாட்டில் 'கற்போம் எழுதுவோம் இயக்கத்தின்' மூலம் 3,21,539 பேர் பயனடைந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.