ETV Bharat / city

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : 24 மணி நேரமும் கண்காணிக்க 45 பறக்கும் படை - 45 flying squad

நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் 45 பறக்கும் படைகளை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
author img

By

Published : Jan 27, 2022, 9:49 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டுகள் மறுவரை செய்யப்பட்டு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனைத்து தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இதனையடுத்து, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 28ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 24 மணி நேரமும் கண்காணிக்க 45 பறக்கும் படை மற்றும் 37 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களைச் சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.

தேர்தல் நடவடிக்கை முடியும் வரை 24 மணி நேரமும் வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் பணம், பொருட்களை பறிமுதல் செய்யும் போது வீடியோ எடுத்து அதன் விவரங்களை உடனுக்குடன் அனுப்பி வைக்கவும் அலுவலர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

வியாபாரிகளிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டால் உரிய ஆவணம் சமர்ப்பித்த பிறகு திருப்பி வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் மழை காலங்களில் நீர் தேங்காதவாறு நடவடிக்கை : அமைச்சர் கே.என். நேரு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.