துபாயிலிருந்து இன்று (டிசம்பர் 29) அதிகாலை சென்னை வந்த சிறப்பு விமானத்தில் பயணித்தவர்களை சுங்கத் துறையினா் சோதனையிட்டனா். அதில், சென்னையைச் சோ்ந்த கருப்பசாமி (65), சசிகுமாா்(31) ஆகிய இருவா் மீதும் சந்தேகம் ஏற்பட்டது.
சோதனை
இருவரையும் சோதனை செய்ததில் அவர்களுடைய சூட்கேஸ்களில் 4 ட்ரோன்கள், அதற்கு உபயோகிக்கும் பேட்டரிகள், உதிரிப்பாகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. உரிய அனுமதியின்றி வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு ட்ரோன்களை எடுத்துவருவது குற்றம். அதனடிப்படையில் கருப்பசாமி, சதிகுமார் இருவரிடமிருந்த ரூ. 6.17 லட்சம் மதிப்புடைய 4 ட்ரோன்கள், பேட்டரிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனா். இருவரையும் கைது செய்த சுங்கத்துறை அலுவலர்கள், விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு துபாய் விமானம்
துபாயிலிருந்து சென்னை வந்த மற்றொரு சிறப்பு விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்டபோது ராமநாதபுரம், மன்னார்குடியைச் சோ்ந்த 2 பயணிகள் உள்ளாடைகளில் 807 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அவர்களை கைது செய்த சுங்கத்துறையினர், அவர்களிடமிருந்த ரூ. 41.63 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: சிபிஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயம்: சுரானா நிர்வாக இயக்குநர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்