ETV Bharat / city

தமிழ்நாட்டில் கரோனா: 38 பேருக்கு உறுதி; 277 பேர் தொடர் கண்காணிப்பு - தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு விவரம்

சென்னை: கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ள நிலையில், தற்போது 277 பேர் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டுகளில் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

TN Cornona update
38 cases confirmed by corona in TN
author img

By

Published : Mar 28, 2020, 8:26 AM IST

கரோனா தொற்றால் தமிழ்நாட்டில் இதுவரை 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கரோனா வைரஸ் கண்காணிப்பு குறித்த மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள தகவலில், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய நான்கு விமான நிலையங்களில் மார்ச் 27ஆம் தேதிவரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 284 பயணிகள் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 15 ஆயிரத்து 629 பயணிகள் வீட்டில் 28 நாள்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். பிற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த 86 ஆயிரத்து 644 பயணிகள் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் தொற்று அதிகளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 112 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

இதேபோல் மருத்துவமனையில் தனி வார்டில் 277 பேர் தொடர் கண்காணிப்பில் இருந்துவருகிறார்கள். தற்போதுவரை 1,243 பயணிகளின் ரத்தப் பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டு 1,195 பயணிகளின் ரத்த மாதிரிகள் முடிவுகள் பெறப்பட்டுள்ளன.

இவற்றில் 1,157 பயணிகளுக்கு நோய்த்தொற்று இல்லை எனவும், 38 பேருக்கு நோய்த்தொற்று உள்ளது எனவும் கண்டறியப்பட்டிருக்கிறது.

77 பேரின் ரத்தப் பரிசோதனை ஆய்வு செய்யப்பட்டுவருகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.