சென்னை: தமிழ்நாடு முழுவதும் 37 ஐஏஎஸ் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவத்துறை முதன்மைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், கூட்டுறவு - உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவத்துறையின் முதன்மைச் செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த சிவராசன், கோவை வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உள்துறைச் செயலாளராக இருந்த எஸ்.கே. பிரபாகர் மாற்றப்பட்டு, பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
வருவாய் நிர்வாக ஆணையராக எஸ்.கே. பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர்கள் நல மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச்செயலராக நசீம் மொய்தீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறைச் செயலாளராக ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியராக பிரதீப் குமாரும், தர்மபுரி மாவட்ட ஆட்சியராக சாந்தி ஐஏஎஸ்-ம் நியமிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ், தென்காசி மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச்செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புவி மற்றும் சுரங்கத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆட்சியராக இருந்த விஜயராணி சேலம் பட்டு வளர்ச்சித்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். வணிகவரித்துறை முதன்மைச்செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையராக ஜெசிந்தா லாசரஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையராக ஜான் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநிலத்தேர்தல் ஆணையத்தின் செயலாளராக விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர்கள் நலன் கூடுதல் தலைமைச்செயலாளராக நசீமுதின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்துத்துறை ஆணையராக நிர்மல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையராக மதிவாணன், உணவுப் பாதுகாப்பு ஆணையராக லால்வேனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் ஆணையராக டாக்டர் தரேஸ் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:'கரோனா அதிகரிப்பைப் பார்க்கும்போது அச்சமாக உள்ளது' - அமைச்சர் மா. சுப்பிரமணியன்