சென்னையில் உள்ள கிண்டி ராஜ்பவன், ஐஐடி, சிஎல்ஆர் வளாகங்களின் பெரும்பாலான பகுதிகள் பாதுகாக்கப்பட்ட காடுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் புள்ளி மான்கள், கலைமான்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் சென்னை ஐஐடி வளாகத்தில் 45 நாய்கள் உயிரிழந்தன. இதனடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில், கடந்தாண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையில் ஐஐடி வளாரத்தில் 35 மான்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வனவிலங்கு காப்பாளர் அலுவலகம் சார்பில் கொடுக்கப்பட்ட அட்டவணையில், ஐஐடி வளாகத்தில் 35 மான்கள் உயிரிழந்துள்ளன. அதிகபட்சமாக டிசம்பரில் 11 மான்கள் உயிரிழந்துள்ளன. இவற்றில் 4 மான்கள் பிளாஸ்டிக் உண்டதால் உயிரிழந்துள்ளன. இரண்டு மான்களை நாய்கள் கடித்து கொன்றுள்ளன. நான்கு மான்கள் உடல்நலக்கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளது. மொத்தம் 15 மான்களுக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள மான்களுக்கு செய்யப்படவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐஐடி வளாகத்தில் நாய்கள் உயிரிழப்பு - விசாரிக்க வந்தவர்களை தடுத்து நிறுத்திய சிலரால் பரபரப்பு