சென்னை: மு.க. ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபொழுது சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டன. தற்போது சென்னை மாநகராட்சி சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுமார் 340 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக மூன்ற பாலங்கள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
வியாசர்பாடி ஜீவா ரயில் நிறுத்தம் அருகே கணேசபுரத்தில் நான்கு வழி மேம்பாலம் 175 கோடி ரூபாயிலும், தியாகராயர் நகர் உஸ்மான் சாலையிலிருந்து அண்ணா சாலை வரை இரண்டு வழி மேம்பாலம் 90 கோடி ரூபாயிலும், ஓட்டேரி நல்லா அருகே இரண்டு வழி மேம்பாலம் 75 கோடி ரூபாயிலும் கட்டப்படவுள்ளது.
இதற்காகத் திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருவதாகவும் ஒரு மாதத்திற்குள்ளாகத் திட்ட அறிக்கை இறுதிசெய்யப்பட்டு முதற்கட்ட மேம்பாலப் பணிகள் தொடங்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதே வேளையில், ஏற்கனவே சென்னையில் உள்ள பாலங்களை மேம்படுத்தவும், அழகுப்படுத்தவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துவருகிறது.
அந்த வகையில், எழும்பூர் பந்தியன் சாலையில் உள்ள மேம்பாலம், கிண்டி சர்தார் பட்டேல் சாலையில் உள்ள மேம்பாலம், கோட்டூர்புரம் ஜி.கே. மூப்பனார் மேம்பாலம் ஆகிய மூன்று மேம்பாலங்களும் எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தி அழகுப்படுத்தப்பட உள்ளன.
இதையும் படிங்க: ஜாமின் வேணும்னா அதச் செய்யுங்க - மதுப்பிரியர்களை சங்கடத்தில் ஆழ்த்திய நீதிபதி