சென்னை ஓஎம்ஆர் சாலையிலிருந்து கோட்டூர்புரம் நோக்கி அதிவேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மத்திய கைலாஷ் அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலாப்பூர் போக்குவரத்து காவல்துறையினர் மதுபோதையில் வாகனத்தில் இருந்த மூன்று பேரை மீட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது கோயம்பேடு காவல்துறை உதவி ஆணையர் ஜெயராமன் மகன் நவீன் ராஜ் என்பது தெரியவந்தது. மற்ற இருவரும் அவரது நண்பர்களான கோட்டூரை சேர்ந்த யஸ்வந்த் ராஜா, கொளத்தூரை சேர்ந்த அரவிந்த் என்பது தெரியவந்தது.
இது குறித்து போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கானது அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவல் உதவி ஆணையர் மகன் கைது
சென்னை: மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக காவல்துறை உதவி ஆணையர் மகன் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.