திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்றதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவித்தார். முன்னதாக அவர் தனது தேர்தல் பரப்புரையின் போதும் இது குறித்து வாக்குறுதி அளித்திருந்தார்.
முதற்கட்டமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.
முதலமைச்சரின் உத்தரவின்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு, டோக்கனில் உள்ள அந்தந்த தேதிகளில் பொதுமக்கள் நிதியை வாங்கிச் செல்லலாம் என்று அறிவுறுத்தபட்டது.
இதன் மூலம் பொதுமக்களும் நீண்ட நேரம் காத்துக்கிடக்காமல் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கரோனா நிவாரண நிதியை பொதுமக்கள் அவர்களுக்குரிய ரேஷன் கடைகளில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி வாங்கிச்சென்றனர்.
இந்நிலையில் கரோனா நிவாரண நிதியின் 2ஆவது தவணை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜுன் 3ஆம் தேதி வழங்கப்படுகிறது.
சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டமும் அன்றைய தினம் தொடங்கி வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க; ’கோவாக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஜூலைக்குள் ஒப்புதல் தரும்’ - பாரத் பயோடெக் நம்பிக்கை