சென்னை: எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான இடங்களில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் 24 இடங்கள் காலியாக உள்ளன.
மாநில ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவக்கல்லூரிகளில் 13 இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் மாப்ஆப் கலந்தாய்வில் வேறு கல்லூரிகளில் இடங்களை தேர்வுச் செய்தனர். இவர்கள் புதியதாக தேர்வுச் செய்த சென்னை மருத்துவ கல்லூரி ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மதுரை மருத்துவக் கல்லூரி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் தலா இரண்டு பேர் சேர்ந்தனர்.
இதனால் இவர்கள் ஏற்கனவே படித்துக் கொண்டிருந்த மருத்துவக் கல்லூரியில் எட்டு இடங்கள் காலியாக இருந்தன. தமிழ்நாட்டில் உள்ள 31 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 812 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்பட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான அனைத்துக் கட்டக் கலந்தாய்வும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
மாப்-அப் கலந்தாய்விற்கு பின்னர் (Mop Up Counselling) 111 இடங்கள் காலியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஸ்டேரே வெக்கன்சி கலந்தாய்வில் 49 இடங்களை தேர்வு செய்ததாக கூறப்பட்டது. தற்போது அரசு மருத்துவக்கல்லூரயில் 24 இடங்கள் காலியாக இருக்கிறது. தேசிய மருத்துவ ஆணையம் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கையை நிறுத்த வேண்டுமென அறிவித்தது.
இதனால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 24 எம்பிபிஎஸ் பல இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாக தமிழக மருத்துவத் துறை அறிவித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களை மாநிலங்களுக்கு திருப்பி அளிக்கப்படாது என ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கால்நடை பராமரிப்பு துறை மானியக் கோரிக்கை மீதான புதிய 16 அறிவிப்புகள் என்னென்ன?