சென்னை கொருக்குப்பேட்டை பகுதிக்குட்பட்ட தங்கவேல் பிள்ளை தோட்டம் பகுதியில் குட்கா பொருட்கள் தயாரிக்கப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல் துறையினர், தங்கவேல் பிள்ளை தோட்டம் பகுதியில் சென்று கண்காணித்தனர்.
மாட்டிக்கொண்ட கும்பல்
அப்போது, விற்பனையில் ஈடுபட்டிருந்த கோபி என்ற நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மாவா, ஹான்ஸ், ஜர்தா, கூல் லிப் அனைத்தும் எழில் நகர் பகுதியில் உள்ள குடோனில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
காவல் துறை கைது நடவடிக்கை
இதனையடுத்து எழில் நகர் பகுதிக்கு சென்ற ஆய்வாளர் குடோனில் பதுங்கியிருந்த இளையராஜா, முருகன் என்பவரை கைது செய்து குடோனிலிருந்த 22 கிலோ பாக்கு, 12 பாக்கெட் ஹான்ஸ், 146 கிலோ ஜர்தா, 24 கிலோ மாவா, சுண்ணாம்பு, கலர் பவுடர் மற்றும் ஆறு மிக்ஸிகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க...ஆவடியில் பைக் மீது வேன் மோதி விபத்து - பொறியாளர் உயிரிழப்பு!