ETV Bharat / city

5 மாதங்களில் 209 காவலர்கள் உயிரிழப்பு: காரணம் என்ன? - 209 police died

தமிழ்நாடு காவல் துறையில் ஐந்து மாதங்களில் 209 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

5 மாதங்களில் 209 போலீசார் உயிரிழப்பு: காரணம் என்ன?

author img

By

Published : Jun 6, 2021, 10:32 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 198 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்பட 1500 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வில்லாமல் அனைத்துக் காவலர்களும் தொடர் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதற்கிடையில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள், வாக்கு எண்ணிக்கை போன்ற இடங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இரவு பகல் பாராமல் உழைத்துவருவதால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் நிலை உண்டாகியுள்ளது.

இதனால் வார விடுப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்ததால் 20 விழுக்காடு பேருக்கு சுழற்சி முறையில் விடுப்பு வழங்கி டிஜிபி உத்தரவிட்டார்.

முன்களப் பணியாளராகக் காவலர்கள் பணிபுரிந்துவருவதால் 4000-க்கும் மேற்பட்டோர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். கரோனா காரணமாகப் பலர் உயிரிழந்துள்ளனர்.

போலீஸ்
காவலர்
காவலர்களின் நலன் சார்ந்த பிரச்சினைகளைக் கண்டறிந்து, காவலர்களுக்கான நலத்திட்டங்களைக் கொண்டுவர காவலர் நலப்பிரிவு என்று ஒரு தனிப்பிரிவு செயல்பட்டுவருகிறது.
ஆனால் அண்மைக் காலமாக காவலர்களின் பிரச்சினைகள் கேட்கப்படாமலும், பணிச்சுமை குறித்து ஆலோசனை வழங்காமல் இருப்பதனாலும் நாளுக்குநாள் தமிழ்நாடு காவல் துறையில் பலி எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது.
குறிப்பாக 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை 209 காவலர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.
ஜனவரியில் 29 நபர்களும், பிப்ரவரியில் 22 நபர்களும், மார்ச் மாதத்தில் 27 நபர்களும், ஏப்ரலில் 48 நபர்களும், மே மாதத்தில் 83 நபர்களும் உயிரிழந்திருப்பதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.
இவர்களில் கரோனா தொற்றால் 59 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 27 பேர் நெஞ்சுவலி காரணமாகவும் மேலும் 27 பேர் விபத்தில் சிக்கியும் உயிரிழந்துள்ளனர். 64 பேர் உடல்நிலை சரியில்லாமலும் 9 பேர் புற்றுநோயாலும் உயிரிழந்துள்ளனர்.
மூன்று நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் உயிரிழந்துள்ளனர். ஒருவர் வீர மரணமடைந்துள்ளார். கடந்தாண்டில் 337 காவலர்கள் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.