ETV Bharat / city

2022ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாள்கள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

2022ஆம் ஆண்டில் 6 ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட 23 அரசு பொது விடுமுறை நாள்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாள்கள்
2022ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாள்கள்
author img

By

Published : Nov 2, 2021, 10:30 PM IST

சென்னை: 2022ஆம் ஆண்டில், 6 ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட, 23 அரசு பொது விடுமுறை நாள்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வணிக வங்கிகள், கழகங்களுக்கும் 2022ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாள்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்தப் பொது விடுமுறை நாள்கள், மாநில பொதுத்துறை நிறுவனங்கள், அரசின் அனைத்து வாரியங்கள் முதலியவற்றுக்கும் பொருந்தும் எனவும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அனைத்து அலுவலகங்களும், பின்வரும் நாள்களில் மூடப்படவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

பொது விடுமுறை நாள்களாக குறிப்பிடப்பட்ட "ஞாயிற்றுக் கிழமைகளுடன்" பின்வரும் நாள்களும், 2022ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாள்களாக கருதப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஆங்கிலப் புத்தாண்டு - 01.01.2022 சனிக்கிழமை

பொங்கல் - 14.01.2022 வெள்ளிக்கிழமை

திருவள்ளுவர் தினம் - 15.01.2022 சனிக்கிழமை

உழவர் திருநாள் - 16.01.2022 ஞாயிற்றுக்கிழமை

தைப்பூசம் - 18.01.2022 செவ்வாய்க்கிழமை

குடியரசு தினம் - 26.01.2022 புதன்கிழமை

வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக / கூட்டுறவு வங்கிகள்) - 01.04.2022 வெள்ளிக்கிழமை

தெலுங்கு வருடப் பிறப்பு - 02.04.2022 சனிக்கிழமை

தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம் / மகாவீரர் ஜெயந்தி - 14.04.2022 வியாழக்கிழமை

புனித வெள்ளி -15.04.2022 வெள்ளிக்கிழமை

மே தினம் - 01.05.2022 ஞாயிற்றுக்கிழமை

ரம்ஜான் - 03.05.2022 செவ்வாய்க்கிழமை

பக்ரீத் - 10.07.2022 ஞாயிற்றுக்கிழமை

மொகரம் - 09.08.2022 செவ்வாய்க்கிழமை

சுதந்திர தினம் - 15.08.2022 திங்கட்கிழமை

கிருஷ்ண ஜெயந்தி - 19.08.2022 வெள்ளிக்கிழமை

விநாயகர் சதுர்த்தி - 31.08.2022 புதன்கிழமை

காந்தி ஜெயந்தி - 02.10.2022 ஞாயிற்றுக்கிழமை

ஆயுத பூஜை - 04.10.2022 செவ்வாய்க்கிழமை

விஜயதசமி - 05.10.2022 புதன்கிழமை

மிலாது நபி - 09.10.2022 ஞாயிற்றுக்கிழமை

தீபாவளி - 24.10.2022 திங்கட்கிழமை

கிறிஸ்துமஸ் - 25.12.2022 ஞாயிற்றுக்கிழமை

ஆகிய நாள்களை அரசு விடுமுறை நாள்களாக அறிவித்து தமிழ்நாடு தலைமைச் செயலர் இறையன்பு அரசாணை வெளியிட்டுள்ளார்.

ஞாயிறு -6, திங்கள் -2, செவ்வாய்- 4, புதன் - 3, வியாழன் - 1, வெள்ளி - 4, சனி - 3 நாள்கள் விடுமுறை நாள்களாக வருகின்றன. இதில் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளே அதிக அரசு விடுமுறை தினங்கள் உள்ளன.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 973 பேருக்கு கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.