ETV Bharat / city

ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 2,010 பேர் மீது வழக்குப்பதிவு - chennai news in tamil

சென்னையில் நேற்று (செப். 19) ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 2,010 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நான்கு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

2-dot-010-were-booked-not-wearing-mask-in-chennai
நேற்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 2,010 பேர் மீது வழக்குப்பதிவு
author img

By

Published : Sep 20, 2021, 9:55 AM IST

சென்னை: கரோனா மூன்றாவது அலை வராமல் தடுப்பதற்கு சென்னை மாநகராட்சி, சென்னை காவல்துறை அலுவலர்கள் உள்ளடக்கிய 15 மண்டல அமலாக்கக் குழுவினர் கடந்த 16ஆம் தேதி முதல் நேற்று (செப்.19) வரை சென்னையில் பல்வேறு பகுதிகளை தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

அதன்படி, காவல் துறையும் மாநகராட்சியும் இணைந்த 11 நபர்கள் அடங்கிய குழுவினர், நேற்று சென்னை மாநகராட்சி, ஆவடி நகராட்சி, சென்னை காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகள், சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முகக்கவசம் அணியாமல் சென்ற 2,010 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து நான்கு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையிலான நான்கு நாட்களில் ஆறாயிரத்து 372 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12 லட்சத்து 74 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் ஒரே நாளில் செலுத்தப்பட்ட 2 லட்சம் தடுப்பூசிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.