சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையிலும், அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, இலவச உணவு, நிவாரண பொருள்கள் வழங்குவதில் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், கனமழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா 2,000 ரூபாய் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. அதன்படி, ரேஷன் கார்டு அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2,000 ரொக்கமாக வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் 2015ஆம் வெள்ளத்தின் போது, குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 நிவாரண தொகை வழங்கப்பட்டது. இதனிடையே குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் பொங்கல் முதல் தொடங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: குடும்பத் தலைவிக்கு ரூ.1,000: முதலமைச்சர் அறிவிப்பு