இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மனிதவள மேம்பாட்டினை வலுபடுத்தும் விதமாக, சென்னையில் பணிபுரியும் வகையில் மேலும், 2,000 செவிலியரை 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக நியமித்து, பணி நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.
இச்செவிலியர் உடனடியாகப் பணியில் இணையத் தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு மாதம் 14,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். மேலும் இவர்களுக்கு தங்கும் இடம் மற்றும் உணவு ஆகியவற்றிற்கான செலவுகளை அரசே ஏற்கும். இதன்மூலம் சென்னையில் கரோனா தடுப்பு மற்றும் மேலாண்மைப் பணிகள் மேலும் வலுவடையும் “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை மூலம் ஏற்கனவே 530 மருத்துவர்கள், 4,893 செவிலியர், 1,508 ஆய்வக நுட்புனர்கள், 2,715 சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், ஒப்பந்த அடிப்படையில் 574 அரசுப் பணியில் அல்லாத முதுநிலை மருத்துவ மாணவர்கள், 665 மருத்துவர்கள், 365 ஆய்வக நுட்புனர்கள், 1,230 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் சில நாள்களுக்கு முன் பணி நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்களுக்கு கரோனா!