சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத் துறை மானிய கோரிக்கை விவாதத்தில் துறையின் அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
- வணிகவரித் துறையின் சேவைகள் அனைத்தும் தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- வணிகவரித் துறையில் புதிய ஏழு புதிய நிர்வாக கோட்டங்கள் உருவாக்கப்படும். ஏற்கனவே 12 நிர்வாகக் கூட்டங்கள் இயங்கிவருகின்றன. அதில் ஒரு அங்கமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் செங்கல்பட்டு கடலூர் திருவாரூர் ஓசூர் திருப்பூர், விருதுநகர் ஆகிய ஆறு இடங்களிலும் சேர்த்து ஏழு புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் உருவாக்கப்படும்
- வணிகவரித் துறையில் ஆறு புதிய நுண்ணறிவு கோட்டங்கள் உருவாக்கப்படும் வணிகவரித் துறையில் தற்போது ஒன்பது நுண்ணறிவு கோட்டங்கள் இயங்கிவருகின்றன அத்துறையில் புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை மேலும் வலுவாக்கவும் தணிக்கைகள் அதிகப்படுத்தவும் ஏதுவாக செங்கல்பட்டு கடலூர் திருவாரூர் ஓசூர் திருப்பூர், விருதுநகர் ஆகிய ஆறு இடங்களில் நுண்ணறிவு கோட்டங்கள் உருவாக்கப்படும்
- போலி பட்டியல் தயாரிக்கும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்
- வணிக வரித்துறையில் மாநில கட்டுப்பாட்டு அறை 3.86 கோடி செலவில் உருவாக்கப்படும்
- வணிகவரித் துறையில் 7 புதிய அலுவலகங்களுக்கு 15 கோடி ரூபாய் செலவில் சொந்த கட்டடங்கள் கட்டப்படும்
- தாமதமாக வரி செலுத்தும் வரை தொடர்ந்து வலியுறுத்த புதிய அழைப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும்
- வணிகர் நல வாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளுடன் கூடுதலாகத் திருமண உதவித் தொகை, விபத்துகளை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்
- வருவாய் கிராமங்களுக்குள்பட்ட குக்கிராமங்கள் ஒரே சார் பதிவாளர் அலுவலக எல்லைக்குள் அமையும் வகையில் பதிவு எல்லைகள் சீரமைக்கப்படும்
- திருவாரூர் திருவள்ளூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை, பெரம்பலூர் ஆகிய வருவாய்க் கோட்டங்களின் தலைமை இடங்களில் ஐந்து புதிய பதிவு மாவட்டங்கள் உருவாக்கப்படும்
- பதிவுத் துறையில் கடந்த காலங்களில் நடந்த பதிவு முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்படும்
- புகைப்படக் கருவிகள், இந்தியக் கிறிஸ்தவ திருமண பதிவுச் சான்றிதழின் உண்மைத்தன்மையை துணை பத்திரப்பதிவு துறை தலைவர்களே வழங்கும் வகையில் இந்திய கிறிஸ்தவ திருமணச்சட்டம் 1872 இல் சட்டத் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்
- திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திண்டிவனம் ஆகிய மாவட்ட பதிவாளர் அலுவலகங்களுக்கு 26 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் பத்திரப் பதிவுத் துறைக்குச் சொந்தமான உள்ள இடங்களில் 40.36 கோடி ரூபாய் செலவில் புதிய அரசு கட்டடங்கள் கட்டப்படும்
- பதிவுத் துறை சார்ந்த தொழில் புரிந்து வரும் 5288 அவன் எழுத்தாளர்கள் மற்றும் அவரது குடும்ப நலனுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆவண எழுத்தர் நல நிதியம் முழுமையான செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.
- ஓய்வு பெற்ற ஆவண எழுத்தர்கள் துறையில் வழங்கப்படுவது போல நலத்திட்ட உதவிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட வழங்கப்படும்
- பதிவுத்துறையில் பொதுமக்களிடமிருந்து பதிவு தொடர்பான புகார்கள் அதிக எண்ணிக்கையில் புறப்பட்டு வருகின்றன பொது மக்கள் பெரும்பாலும் நேரடியாகவே புகார் அளிக்க விரும்புவதால் திங்கள்கிழமைதோறும் பதிவு குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படும்
- ஒவ்வொரு மண்டலத்திலும் துணை பதிவுத்துறைத் தலைவர் ஆளும் ஒவ்வொரு பதிவு மாவட்டத்திலும் மாவட்ட பதிவாளர் ஆனாலும் அவர்களது அலுவலகங்களில் வாரந்தோறும் திங்கட்கிழமை இந்த முகாம் நடத்தப்படும்
- பதிவுத் துறையில் பணியாற்றும் அனைத்து சார்பதிவாளர்களுக்கும் பதிவு பணியில் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டியது இதனைக் கருத்திற்கொண்டு கூர்நோக்கு அடிப்படையில் சார்பதிவாளர் அலுவலகங்கள் கீழ்கண்டவாறு மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது
- அ வகை அலுவலகம் அதிக கூர் நோக்கு உடையது
- ஆ வகை அலுவலகம் கூர் நோக்கு உடையது
- இ வகை அலுவலகம் சாதாரண வகையிலானது
- சார் பதிவாளர் அலுவலகங்களில் டோக்கன் காட்சி கருவியில் ஆவணதாரர் பெயரைகளையும் காட்சிப்படுத்தப்படும் முறை 3.40 கோடி செலவில் நடைமுறைப்படுத்தப்படும்
- அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் கண்காணிப்பு மேம்படுத்துவதற்காக அந்த அலுவலகங்களில் உள்ள பதிவு அறையில் இணைய நெறிமுறை புகைப்பட கருவிகள் 5.95 கோடி செலவில் நிறுவப்படும்
- தணிக்கை மாவட்ட பதிவாளர்கள் நிர்வாக மாவட்ட பதிவாளர்கள் உதவி பதிவுத்துறை தலைவர்களுக்கு புதியதாக 50 வாகனங்கள் 4.10 கோடி செலவில் வாங்கப்படும்
- திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திண்டிவனம் ஆகிய மாவட்ட பதிவாளர் அலுவலகங்களுக்கு, 26 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்தமாக உள்ள கட்டடங்களில் 41.36 கோடி செலவில் புதிய அரசு கட்டடங்கள் கட்டப்படும்