ETV Bharat / city

திமுக வட்டச் செயலாளர் கொலை: இருவர் கைது - dmk selvam murder issue

திமுக வட்டச் செயலாளர் செல்வம் கொலைசெய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

திமுக வட்டச் செயலாளர்
author img

By

Published : Feb 3, 2022, 10:02 AM IST

சென்னை: மடிப்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் செல்வம் (38). இவர் திமுக வட்டச் செயலாளர். இவரைக் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி இரவு அவரது அலுவலகம் அமைந்திருக்கக் கூடிய ராஜாஜி நகர் பிரதான சாலையில் ஆறு பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு மூன்று இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றது.

இச்சம்பவம் குறித்து மடிப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் மடிப்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு திமுக வட்டச் செயலாளர் செல்வம் கொலை வழக்கில் தொடர்புடையவர்களைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.

திமுக வட்டச் செயலாளர்
திமுக வட்டச் செயலாளர் செல்வம்

இன்று (பிப்ரவரி 3) அதிகாலை திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே காரில் தப்பிச் சென்ற இருவரை தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் சென்னையைச் சேர்ந்த தனசேகரன், தூத்துக்குடி மாவட்ட அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் எனத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கைதுசெய்யப்பட்ட இருவரும் சென்னையிலிருந்து தப்பிச் செல்ல முயலும்போது கைதுசெய்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். இருவரையும் சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை தேடிவருவதாகவும் கூறினர்.

முழுமையான விசாரணைக்குப் பின்பு கொலைக்கான காரணம் தெரியவரும் எனக் காவல் துறை சார்பாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உறவாடிய உறவினர்; களவாடிய திருடன்! - சென்னையில் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.