தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, டாஸ்மாக் கடைகள் 21 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. இதனால் சில பகுதிகளில் கள்ளச்சாராயம் தயாரிக்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதி வேம்புலியம்மன் கோயில் தெருவில் வீட்டிலேயே கள்ளச்சாராயம் தயாரித்து விற்று வந்ததாக சங்கர் நகர் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அப்பகுதிக்கு காவல் துறையினர் சென்றனர்.
காவல் துறையினர் வருவதையறிந்த சாராய வியாபாரிகள் நான்கு பேர், அங்கிருந்து தப்ப முயன்றனர். இவர்களை விரட்டிச் சென்ற காவல் துறையினர் அதே பகுதியைச் சேர்ந்த வசந்த் மற்றும் பூபாலன் ஆகியோரைப் பிடித்தனர். இருவர் தப்பி ஓடினர். அவர்களிடம் விசாரணை செய்ததில், தப்பிச் சென்றவர்கள் வெங்கடேஷ், டில்லி கணேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது.
பிடிபட்ட இருவரிடம் இருந்து ஐந்து லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடித்தனர். மேலும் தப்பிச் சென்ற இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.