ETV Bharat / city

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் உயிரிழந்த விவகாரம்: 2 மின்வாரிய ஊழியர்கள் விடுவிப்பு - 2 Electrical staff released Retired power plant employee dies case in Chennai

சென்னையில் மின்சாரம் பாய்ந்து ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் உயிரிழந்த விவகாரத்தில் 2 மின்வாரிய ஊழியர்களை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு
ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு
author img

By

Published : Jun 29, 2022, 7:35 PM IST

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (61). இவர் மின்வாரிய துறையில் லைன் ஆய்வாளராக (Line Inspector) பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பின்பும் தன்னுடன் மின்வாரியத்தில் பணியாற்றிய நண்பர்களுடன் சேர்ந்து மின் பழுதுகளை சரிசெய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி தலைமைச் செயலக காலனி நம்மாழ்வார்பேட்டை ஏ.கே.சாமி முதல் தெருவில் மின் இணைப்பு பிரச்சனையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனை சரி செய்வதற்காக மின்வாரிய ஊழியர்கள் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான ராதாகிருஷ்ணனை உதவிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு

தலைமைச் செயலக காலனி பழைய காவல் நிலையம் எதிரில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான ராதாகிருஷ்ணன் மின் பழுதை சரி செய்து கொண்டிருந்தபோது அவர் மீது மின்சாரம் தாக்கி மின் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரான ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ராதா கிருஷ்ணனின் மகன் ராஜேஷ் குமார் என்பவர் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தலைமை செயலக காலனி போலீசார் அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் (304(a)) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரான ராதாகிருஷ்ணனை மின் பழுதை சரிசெய்யும் பணிக்கு அழைத்துச் சென்றது மின்வாரிய லைன் ஆய்வாளரான (Line Inspector) சாலமன் (54) மற்றும் ஒயர் மேன் (Wireman) ஏழுமலை(51) என்பது தெரியவந்தது.

அதனடிப்படையில் மின்வாரிய லைன் ஆய்வாளர் சாலமன் மற்றும் ஒயர் மேன் ஏழுமலை ஆகிய இருவரை தலைமை செயலக காலனி போலீசார் இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின் அவ்விருவரையும் போலீசார் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

இதையும் படிங்க: நதிகளை நாம் தெய்வமாக வணங்க வேண்டும் - ஆளுநர் ஆர்.என். ரவி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.