திமுக அரசு பொறுப்பேற்ற பின் முதன்முறையாக வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி நிதி நிலை அறிக்கைத் தாக்கல் செய்யப்படுகிறது.
நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்னர், கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியின் நிதி மேலாண்மை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.
இந்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் இன்று (ஆக்.9) வெளியிட்டார்.
அறிக்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர், பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் வருவாய் குறைந்து, கடன் அதிகரித்து நிதிநிலை மிக மோசமடைந்துள்ளது என்றார்.
தமிழ்நாட்டின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி அதிகரித்துவிட்டது எனவும் தற்போதைய நிலையில் தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.5.24 லட்சம் கோடியாக உள்ளது என்றார்.
அதன்படி, தமிழ்நாட்டின் ஒரு குடும்பத்தின் தலையில் பொது சந்தா கடன் மட்டும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாயாக உள்ளது எனக் கூறினார்.
இதையும் படிங்க: உல்லாசமாக வாழலாம் வாங்க - ஆசையில் சிக்கியவர்கள் புகார்..!