ETV Bharat / city

பூங்கா ஒப்பந்ததாரர்களுக்கு 5 மாதத்தில் ரூ.13 லட்சம் அபராதம் - contractors

மாநகராட்சி பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த 5 மாதக் காலத்தில் ரூ.13 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி அபராதம்
சென்னை மாநகராட்சி அபராதம்
author img

By

Published : Sep 8, 2022, 6:35 AM IST

சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த 5 மாதக் காலத்தில் ரூ.13,68,718 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் மாநகரில் சுற்றுச்சூழலை பேணிகாக்கவும், பொதுமக்களின் பொழுது போக்கிற்காகவும் 738 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவருகின்றன. இவற்றில் 571 பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் பராமரிப்பிலுள்ள பூங்காக்களில் ஒப்பந்ததாரர்கள் புல்வெளிகளை வெட்டி பராமரித்தல், தேவையான நேரத்தில் புல்வெளிகளுக்கிடையேயான களைகளை அகற்றுதல், நடைபாதை மற்றும் செடி, கொடிகளை சரியாக பராமரித்தல், புல்வெளி அல்லது செடிகள் வளர்ச்சியின்றி இருப்பின் அவ்விடங்களில் புதியதாக நட்டு பராமரித்தல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பூங்கா பராமரிப்பு பணிகளில் காவலர், தூய்மை பணியாளர் மற்றும் தோட்டப் பராமரிப்பாளர் போன்ற ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையை விட குறைவான அளவில் பணியாளர்கள் இருந்தால் ரூ.500 முதல் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

மூன்று முறைக்கு மேல் பணியாளர் பற்றாக்குறை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பூங்கா பராமரிப்பு ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். பூங்காவை சரிவர சுத்தம் செய்யாவிடில் நாளொன்றுக்கு ரூ.600-ம், கழிவறை பகுதிகளை சரிவர சுத்தம் செய்யாவிடில் நாளொன்றுக்கு ரூ.2000-ம் அபராதமாக விதிக்கப்படுகிறது.

பூங்காவில் உள்ள மரம், செடி, கொடி மற்றும் புல்தரைகளை பராமரிப்பதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் 4,000 சதுர அடி வரையிலான பூங்காக்களில் ரூ.2,500 முதல் 4,000 சதுர அடிக்கு மேலான பூங்காக்களில் ரூ.15,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி அபராதம்
சென்னை மாநகராட்சி அபராதம்

சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் ஏப்ரல் 1 தேதி முதல் கடந்த 3 தேதி வரை மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் மேற்குறிப்பிட்ட பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ.13,68,788 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த மாதம் 19 தேதி முதல்கடந்த 3 தேதி வரை கடந்த 2 வாரங்களில் மட்டும் ஒப்பந்தத்தில் தெரிவித்துள்ள எண்ணிக்கையின்படி பணியாளர்கள் இல்லாத காரணத்திற்காக ரூ.27,000, பராமரிப்பு பணிகளில் உள்ள குறைபாடுகளுக்காக ரூ.1,66,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவையில் ஒரு கழிவறைக்குள் இரு கோப்பைகள் - அதிர்ச்சியில் பொதுமக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.