பள்ளிக்கல்வித்துறையில் இருந்தோ, அரசு தேர்வுத்துறையில் இருந்தோ எந்தவித வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்படவில்லை என அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி தெரிவித்துள்ளார்.
மாவட்ட அளவில் மாணவர்கள் படித்த பாடங்களைத் தொடர்ந்து நினைவு கூரும் வகையில் ஆசிரியர்கள் மூலம் பாட வாரியாக தேர்வு நடத்தவேண்டும் எனவும்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கூறியிருந்தார்.
இந்நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் எதையும் பள்ளிக்கல்வித்துறையோ, அரசு தேர்வுத்துறையோ வெளியிடவில்லை. மதுரை, திருவாரூர் மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தாங்களாகவே நெறி முறைகளை உருவாக்கி, அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் தேர்வு எழுத அறிவுரை வழங்கி உள்ளனர்.
அந்த வழிகாட்டு நெறிமுறைகள் இதோ:
- வாட்ஸ்அப்-ல் மாணவியருக்கு தனியாகவும், மாணவர்களுக்குத் தனியாகவும் குழு (Group) ஏற்படுத்த வேண்டும்.
- வாட்ஸ்அப் குழுவில் வினாத்தாள்களை அனுப்ப வேண்டும்.
- மாணவர்கள், வினாத்தாளைப் பார்த்து அதற்குரிய விடைகளைத் தனி தாளில் எழுதி, அதில் பெற்றோர் கையொப்பம் பெற்று, பின் அதைப் படம் பிடித்து, PDFஆக மாற்றி அனுப்ப வேண்டும்.
- விடைத்தாளில் பெயர், தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும்.
- வாட்ஸ்அப் குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், வீடியோக்களை பதிவிடக் கூடாது.
- ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ்அப் மூலம் திருத்தி,அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும்.
மாணவர்களைப் பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் மூலம் அலகுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் உதவியின் மூலம் மதுரை, திருவாரூர் மாவட்ட பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே அலகுத்தேர்வு நடத்தப்படயிருப்பது உறுதியாகியிருக்கிறது.
இதையும் படிக்கலாமே: சுந்தரவனக் காடுகளை தாக்கும் 'யாஷ் புயல்'?