ETV Bharat / city

12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தயார்!

செய்முறைத் தேர்வுகள் நாளை துவங்க உள்ள நிலையில், பள்ளிகளின் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தனர். அதேபோல் மாணவர்கள் பயன்படுத்தும் ஆய்வகத்தில் உள்ள பொருட்களையும் சுத்தம் செய்ததுடன், பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

12th practical exam labs ready
12th practical exam labs ready
author img

By

Published : Apr 15, 2021, 11:59 AM IST

Updated : Apr 15, 2021, 1:04 PM IST

சென்னை: 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வை நடத்துவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுத் துறை அறிவித்திருந்தது. அதன்படி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுள்ள பாடங்களான இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், புள்ளியியல், கணினி அறிவியல், நுண்ணூயிரியல், உயிர் வேதியியல், நர்சிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.

செய்முறைத் தேர்வுகள் நாளை துவங்க உள்ள நிலையில், பள்ளிகளின் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்கின்றனர். அதேபோல் மாணவர்கள் பயன்படுத்தும் ஆய்வகத்தில் உள்ள பொருட்களையும் சுத்தம் செய்ததுடன், பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மாணவர்கள் ஒரு பிரிவில் 25 பேர் வீதம் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செய்முறை தேர்வில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை அரசு தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார். அதன்படி,

மாணவர்களை பல பிரிவுகளாகப் பிரித்து செய்முறை தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை செய்முறை தேர்வு முடிந்த பின்னர் ஆய்வகத்தை முழுமையாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

மாணவர்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி செய்முறை தேர்வினை மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு
12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு

மாணவர்களுக்குப் போதுமான அளவு சானிடைசர் ஏற்பாடு செய்து தரவேண்டும்.

மாணவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் கைகளில் சானிடைசர் போட்ட பின்னர் வேதியியல் பொருள்களை உடனடியாக தொடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.

மாணவர்களும், ஆசிரியர்களும் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியைப் பின்பற்றி கைகளை சோப்பு போட்டு கழுவிய பின்னர் ஆய்வகத்துக்குள் செல்ல வேண்டும்.

12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு
12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு

செய்முறை தேர்வு நடைபெறும்போது கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் ஆய்வகத்தில் திறந்திருக்க வேண்டும்.

ஆய்வகத்திற்கு வருவதற்கு முன்னர் அனைத்து மாணவர்களும் கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கரோனா தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வை பின்னர் நடத்திக் கொள்ளலாம்.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டு, கட்டுப்பாட்டு பகுதியில் பள்ளி இருந்தால் அங்கு செய்முறை தேர்வை நடத்தாமல் அருகிலுள்ள பள்ளியில் செய்முறை தேர்வை நடத்த வேண்டும்.

12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தயார்!

மாணவர்கள் வேதியியல் தேர்வில் வாய் வைத்து ஊதும் செய்முறை தேர்வினை தவிர்க்க வேண்டும்.

நுண்ணுயிர் கிருமிகள் போன்றவற்றை தொலைநோக்கிக் கருவி மூலம் பார்ப்பதையும் மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.

இந்த செய்முறைத் தேர்வினை தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே மாதம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், கரோனா தாெற்றின் காரணமாக அதனை ஒத்திவைப்பது குறித்து இன்று தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். அதன்பின்னர் முடிவு வெளியாகும் என தெரிகிறது.

Last Updated : Apr 15, 2021, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.