ETV Bharat / city

பிப்.12 முதல் முதுகலை ஆசிரியர் தேர்வு ஆரம்பம் - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆசிரியர் தேர்வு வாரியம்
author img

By

Published : Feb 7, 2022, 7:14 PM IST

சென்னை: முதுகலை ஆசிரியர் பணியிடத் தேர்வில் பங்கேற்க இரண்டு தவணை கரோனா தடுப்பு ஊசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது 72 நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கரோனா நெகடிவ் பரிசோதனை முடிவோடு வர வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான, ஆன்லைன் தேர்வு வரும் பிப்.12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் 160-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதுகலை ஆசிரியர் பணியிடத் தேர்வில் பங்கேற்க கிட்டதட்ட 2.6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வு வாரியம் அறிவுரை

மேலும், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு நகராட்சித்தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், அவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை காண்பித்து தேர்தல் பணியில் விலக்கு பெற்றுக் கொள்ள முடியும். இதனால், தேர்வர்கள் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள்.

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

17 பாடங்களுக்கான முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணிக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கு கல்லூரிகளில் உள்ள கம்ப்யூட்டர் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகப்பட்சமாக ஒரு நாளைக்கு 50,000 பேர் வரையில் எழுதும் வகையில் தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா தெரிவித்தார்.

நுழைவுச்சீட்டு

மேலும், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் தேர்வர்களுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவை இணையதளம் மூலம் மட்டுமே வழங்கப்படும், நேரடியாக வழங்கப்படாது.

தேர்வர்களுக்கான தேர்வு மையம், மாவட்டம் போன்றவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கொள்கைப்படி குலுக்கல் முறையில் நடைபெறும்.

தேர்வு மைய நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரத்துக்கு, நுழைவுச்சீட்டின் பிரதியுடன் தேர்வர்கள் செல்ல வேண்டும். நுழைவுச்சீட்டு இல்லாவிட்டால் தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தடை செய்யப்பட்ட பொருள்கள்

மேலும், ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடன், விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியும் தவறாமல் எடுத்து வர வேண்டும்.

காலை தேர்வுக்கு 7.30 மணிக்கும், பிற்பகல் தேர்வுக்கு 12.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வு மையத்திற்கு முன்பு காவல் துறை மற்றும் பாதுகாப்புப்பணியாளர்கள் தேர்வர்களை சாேதனைச் செய்த பின்னர் அனுப்புவார்கள்.

தேர்வு மையத்திற்குள் மின்னணு சாதனப்பொருள்கள், கைபேசி, மைக்ரோ போன், கால்குலேட்டர், மடிக்கணினி, பேஜர், டிஜிட்டல் டைரி போன்ற மின்சாதனப் பொருள்களும் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.தேர்வு மையத்தில் பொருள்களை வைத்தால் அதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பேற்காது.

தேர்வர்களுக்குத் தரப்படும் பொருள்கள்

தேர்வு அறையில் தேர்வர்களுக்கு விடைகளை போட்டுப் பார்ப்பதற்குத் தேவையான தாள்கள், பேனா, பென்சில் அளிக்கப்படும்.

தேர்வு முடிந்தப்பின்னர் விடைகளை போட்டுப்பார்த்த தாளை தேர்வு அறையின் கண்காணிப்பாளரிடம் மீண்டும் திருப்பி தந்துவிட்டு வர வேண்டும்.

பாலிடெக்னிக் தேர்வுகள் 3 மணி நேரம் நடைபெறும். 150 மதிப்பெண்களுக்கு 150 கேள்விகள் கேட்கப்படும்.

முக்கியமான பாடத்தில் 110 கேள்விகள், கல்வியியல் முறைகள் பாடத்தில் 30 மதிப்பெண்கள், பொது அறிவில் 10 மதிப்பெண்கள் என 150 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வர்கள் தவறான விடைகளை அளித்தால் அதற்காக மதிப்பெண்கள் குறைக்கப்படாது.

குற்றவியல் நடவடிக்கை

தேர்வு அறையில் அமைதி கடைபிடிக்க வேண்டும். தேர்வு அறையில் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்ட நபர்களைத் தவிர, வேறு நபர்களுக்கு அனுமதி கிடையாது.

தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், துறையின் மூலம் வரும் காலத்திலும் தேர்வெழுத முடியாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேர்வு அறைக்குள் நுழையும்போது உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுவதுடன், கைகளை கிருமி நாசினி வைத்து சுத்தம் செய்யவேண்டும். கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட 27 விதிமுறைகளை ஏற்றுக் காெள்கிறேன் என ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இதையும் படிங்க: 'என் காரை திருப்பி கொடுங்க... ஆடி காரில் தான் பணிக்குச்செல்வேன்' - அடம்பிடிக்கும் பப்ஜி மதனின் மனைவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.