ETV Bharat / city

மீண்டும் வெளியான 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்! புதிய கேள்வித்தாள் ரெடி..

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (ஏப்.4) நடைபெற இருந்த திருப்புதல் தேர்வில் கணித பாடத்திற்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகிய நிலையில், மீண்டும் கணித பாடத்திற்கான 2ஆம் கட்ட திருப்புதல் தேர்வுக்கு தயாரிக்கப்பட்ட 2 வினாத்தாள்களின் 2 தொகுப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மீண்டும் வெளியான வினாத்தாள்
மீண்டும் வெளியான வினாத்தாள்
author img

By

Published : Apr 3, 2022, 8:02 PM IST

சென்னை: கரோனோ பரவல் காரணமாக கடந்த 2 அண்டுகளாகப் பள்ளிகள் மூடப்பட்டு சரியாக வகுப்புகள் செயல்படாத நிலையில், இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற முதல் கட்ட திருப்புதல் தேர்வு நடைபெற்றபோது, தேர்விற்கு முதல் நாளே அந்தந்த நாளிற்குரிய திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கக்கூடிய இரண்டு தனியார் பள்ளிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

பணி இடைநீக்கம்: அதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், மார்ச் 28 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த 2ஆம் கட்ட திருப்புதல் தேர்வுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 தொகுப்பு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டன. இந்நிலையில், நாளைய தினம் நடைபெற உள்ள கணித தேர்வுக்குரிய வினாத்தாள் இன்று (ஏப்.3) முன்கூட்டியே வெளியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளியான கணித பாடத்திற்கான வினாத்தாள்
வெளியான கணித பாடத்திற்கான வினாத்தாள்

முதல் கட்ட திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான சமயத்தில், இனி இதுபோன்ற் சம்பவங்கள் நடைபெறாது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. அதனையும் மீறி, மீண்டும் தற்போது வினாத்தாள் வெளியாகியுள்ளது. மேலும், தேர்வின்போது வினாத்தாள் வெளியானால் அந்த பள்ளியின் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தது.

அரசு தேர்வுத்துறை எச்சரிக்கை: பொதுத்தேர்வு கூறிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி உரிய முறையில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அரசு தேர்வுத்துறை எச்சரிக்கை செய்திருந்தது. இவர்களுக்கான கேள்வித்தாள்களை மாவட்டங்களில் உள்ள அச்சகங்களில் அச்சிட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்கினர். இதன் மூலம் வினாத்தாள் வெளியானது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து வருகிறது.

இது தொடர்பாக, '12ஆம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த விவகாரத்தில் நாளை (ஏப்.4) நடைபெற இ்ருந்த தேர்விற்கான கேள்வித்தாள் மாற்றப்பட்டும். பின், மின்னஞ்சல் மூலமாக புதிய கேள்வித்தாள்கள் அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பி தேர்வு நடத்தப்படும்' என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ICC Women's World Cup: 7ஆவது உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா; அலிசா ஹீலி 170!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.