ETV Bharat / city

18 மாநிலங்களுக்கு ரூ. 12,351 கோடி மானியத் தொகை விடுவிப்பு! - ஊரக உள்ளாட்சி அமைப்புகள்

தமிழ்நாடு உள்பட 18 மாநில ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 12ஆயிரத்து 351கோடி ரூபாய் மானிய தொகையை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

subsidy released for 18 states from central govt

author img

By

Published : Jan 28, 2021, 6:27 AM IST

சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 12ஆயிரத்து 351கோடி ரூபாய் மானிய தொகையை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட 18 மாநிலங்களுக்கு நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை 12ஆயிரத்து 351கோடி ரூபாய் மானிய தொகையை விடுவித்துள்ளது. 2020-21ஆம் நிதியாண்டில் விடுவிக்கப்பட்ட அடிப்படை மானியத்தின் இரண்டாவது தவணைத் தொகை இதுவாகும்.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் பரிந்துரையின்படி, முதல் தவணைக்கான பயன்பாட்டுச் சான்றிதழை வழங்கிய 18 மாநிலங்களுக்கு மானியத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அடிப்படை மானியத்தின் முதல் தவணையாகவும், 14ஆவது நிதி ஆணையத்தின் நிலுவைத் தொகையாகவும் மொத்தம் ரூ.18,199 கோடி, 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டது.

அதே வேளையில் இணைப்பு மானியத்தின் முதல் தவணையாக ரூ. 15,187.50 கோடி மானியத் தொகை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டது. இதன்மூலம் அடிப்படை மானியங்களாகவும், இணைப்பு மானியங்களாகவும் மொத்தம் ரூ. 45,738 கோடியை மத்திய செலவினத் துறை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு ரூ. 1803.50 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.