சென்னை: தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை என மக்களால் அழைக்கப்பட்ட தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 119ஆவது பிறந்தநாளான இன்று (ஜூலை.15) கல்வி வளர்ச்சி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
கர்மவீரர் திருவுருப்படத்திற்கு மரியாதை
அவரது பிறந்தநாளான இன்று அவரின் சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் மக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பல்லவன் இல்லம் எதிரே அமைந்துள்ள அவரது திருவுருப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் டி.ஆர்.பாலு, ஆ.ராஜா, சட்டப்பேரவை உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: 'சங்கரய்யாவின் 100ஆவது பிறந்தநாள்: நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்'