ETV Bharat / city

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த 118 அவசர கால ஊர்திகள்: முதலமைச்சர் தொடங்கி வைப்பு!

தமிழ்நாடு முழுவதிலும் 1,005 அவசர ஊர்திகள் இயங்கிவருகின்றன. கரோனா காலங்களில் மக்களுக்கு பயன்படும் வகையில் இதனை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டு, அதில் முதற்கட்டமாக 118 அவசர ஊர்திகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த 118 அவசர கால ஊர்திகள்

author img

By

Published : Aug 31, 2020, 1:44 PM IST

சென்னை: கரோனா காலத்தில் உரிய நேரத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூடுதலாக 118 அவசர ஊர்தி வாகனங்களை தலைமை செயலத்திலிருந்து முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் 1,005 அவசர ஊர்திகள் இயங்கி வருகின்றன. இந்த சேவையை விரிவுபடுத்த தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ் 108 அவசர கால ஊர்தி சேவைக்காக 103 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 500 அவசரகால ஊர்திகளை கூடுதலாக கரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டம் வகுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அதில் முதற்கட்டமாக 118 அவசர கால 108 ஊர்திகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார். இதில் அரசு சார்பில் ரூ. 20.65 கோடி மதிப்பில் 90 ஊர்திகளும், தனியார் நிறுவனம் சார்பில் ரூ. 1.26 கோடி மதிப்பில் 18 ஊர்திகளும், ரூ. 3.09 கோடி மதிப்பில் 10 ரத்த தான ஊர்திகளும் செயல்பட தொடங்கியுள்ளன.

இவற்றில் பி.எல்.எஸ் எனப்படும் அடிப்படை வசதி கொண்ட அவசரகால ஊர்திகளும், ஏ.எல்.எஸ் எனப்படும் மேம்படுத்தப்பட்ட அவசரகால ஊர்திகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த அவசரகால ஊர்திகளில் செயற்கை சுவாச கருவி, மூச்சு அளவீட்டு கருவி, மின் அதிர்வு சிகிச்சை கருவி போன்ற உயர்தர கருவிகளுடன் 60 மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை கையாள அவசரகால மேலாண்மை தேர்ச்சி பெற்ற பணியாளர்களும் ஓட்டுநர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த 118 அவசர கால ஊர்திகள்

இந்த ஊர்திகள் இன்று (ஆகஸ்ட் 31) முதல் செயல்பட இருக்கின்றன. இந்த அவசர ஊர்திகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து, சில தினங்களில் மீதமுள்ள அவசர ஊர்திகள் பயன்பாட்டிற்கு வரும் என சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.