சென்னை: கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக ஒமைக்ரான் வெறும் இரண்டு வாரத்தில் 100 நாடுகளுக்கும் மேல் பரவிவிட்டது. இந்தியாவில் கடந்த வாரத்தில் 80 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் 650 பேருக்கு உறுதியாகி உள்ளது.
மகாராஷ்டிரா, தெலங்கானா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வந்த 7 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 45ஆக அதிகரித்துள்ளது.
இந்த 11 பேரில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். மீதமுள்ள 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: Omicron Outbreak: பள்ளி, கல்லூரிகளை மூட முதலமைச்சர் உத்தரவு