சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிலையங்களை மூடப்பட்டன. இதனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன.
தொடர்ந்து இந்த ஆண்டு, 10,11ஆம் வகுப்புகளில் பயின்றோர் அனைவரும் பொதுத்தேர்வுகள் ஏதும் இல்லாமல் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களின் மதிப்பெண் பட்டியல் கடந்த ஜூன் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அனைவரும் பாஸ்
மேலும், இதில் பெற்ற மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கும், மே மாதம் துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்காமல் தவறவிட்ட மாணவர்களுக்கும் இம்மாதம் (செப்டம்பர்) துணைத் தேர்வுகள் நடத்த அரசு திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், துணைத் தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தற்போது நிலவிரும் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வு - மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டி விதிமுறைகள்!