சென்னை: தமிழ்நாட்டில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது.
அந்தவகையில், புனேவிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 9 பெட்டிகளில் 1 லட்சத்து 8 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன. இதனை சுகாதாரத் துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு சென்னை விமான நிலையத்திலிருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை பெரிய மேட்டிலுள்ள மருந்து கிடங்குக்குக் கொண்டு சென்றனர்
இதையும் படிங்க: கி.மீ. கணக்கில் வரிசையில் நின்றும் தடுப்பூசி இல்லை!