ETV Bharat / city

'நிவர் புயல்: 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன' - விஜயபாஸ்கர்!

சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக தமிழ்நாடு முழுவதும்  108 ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

minister-vijayabaskar
minister-vijayabaskar
author img

By

Published : Nov 24, 2020, 3:20 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை சார்பில், தமிழ்நாடு
முழுவதும் 108 அவசரகால சேவை கட்டுப்பாட்டு மையம் மற்றும் 104 மருத்துவ உதவி மையம் ஆகியவை விரைவாக உதவிடும் வகையில் தயார் நிலையில் உள்ளன.

குறிப்பாக, கடலோர மாவட்டங்களான புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 465 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. அவை தேவை ஏற்பட்டால் அதிகரிக்கப்படும்.

அதீத கனமழையால் தொலைத்தொடர்பு சேவை பாதிப்படைந்தாலும் தகவல்கள் கிடைக்கப்பெறும் வகையில் 108 அவசரகால ஊர்திகளை காவல் நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு அருகில் ஆம்புலன்ஸ்களை நிறுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் 108 அவசரகால சேவை கட்டுப்பாடு மையத்திற்கு, அதிக அளவிலான அழைப்புகள் வருவதற்கு வாய்ப்புள்ளதால், கூடுதலாக பணியாளர்கள் பணியில் இருக்கவும், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்குமிடம் உள்பட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மின்தடை ஏற்படாமலிருக்க இரண்டு ஜெனரேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 108 அவசரகால சேவையானது, காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை, கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

108 அவசரகால சேவை கட்டுப்பாட்டு மையத்திற்குள், தற்பொழுது தற்காலிக அவசரகால செயல்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 24 மணிநேரமும் அவசரகால அழைப்புகளை கண்காணித்து, அரசு வெளியிடும் தகவல்கள் மற்றும் எச்சரிக்கைகளை
உடனுக்குடன் குறுகிய செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் வழங்கப்படும்.

பொதுமக்கள் அவசரகால செயல்பாட்டு மைய எண்களான 044-28888105, 7338895011 ஆகியவற்றை தொடர்புகெண்டு தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நிவர் புயல்: மயிலாடுதுறைக்கு பேரிடர் மீட்புக் குழுவினர் வருகை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.