சென்னை: நாடு முழுவதும் வருகிற 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் 10,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, சென்னை - காமராஜர் சாலையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மட்டும் 2, 500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மூன்றடுக்கு காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கான அலங்கார ஊர்திகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்