ETV Bharat / city

"நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை" மீது 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு - சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நோட்டீஸ் - அமெரிக்கன் டாலர்

"நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை" மீது 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்
author img

By

Published : Feb 2, 2022, 9:41 PM IST

சென்னை: வழக்கறிஞர் எம். சீனுவாசன் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், இந்தியாவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள பெகாசஸ் மென்பொருள் விவகாரத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் புலானய்வுக் கட்டுரை வெளியிட்டது தொடர்பாக இருந்தது.

நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம். சீனுவாசன் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், 'இஸ்ரேல் இடம் இருந்து பெகாசஸ் மென் உளவுப்பொருள் வாங்கி, இந்தியாவில் மத்திய அரசு அரசியல்வாதிகள் மற்றும் நீதிபதிகள், அலுவலர்களை உளவு பார்த்தாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, கடந்தாண்டு ஜன.28ஆம் தேதி புலனாய்வுக் கட்டுரை ஒன்று பிரசுரித்து இருந்தது.

இச்செய்தியில் சிறிதளவும் உண்மை இல்லை. இதனால் இந்தியாவிற்கு உலக நாடுகளிடம் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது என்றும், முறையாக விசாரிக்காமல் அவசரகோலத்தில் கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தூதுர் எதிர்ப்பு

ஐ.நா.-வில் இந்தியாவுக்கான தூதுர் இதனைக் கடுமையாக மறுத்துள்ளார். இக்கட்டுரையால் நாட்டிற்கும் இந்தியர்களுக்கும் மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டு உள்ளது.

அதனால், இந்த நோட்டீஸ் கிடைத்த ஒரு வாரத்தில் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் முதல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்து செய்தி பிரசுரிக்க வேண்டும்.

தவறினால் பத்திரிகை மற்றும் புலனாய்வு கட்டுரையாளர்கள் மற்றும் வாசித்தவர்கள் மீது 100 கோடி இந்திய ரூபாய் அல்லது 14 மில்லியன் அமெரிக்கன் டாலர் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்படும்' என்று நோட்டீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு உதவ தமிழ்நாடு காவல்துறை அலுவலர்கள் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.