ETV Bharat / city

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம்! - முதலமைச்சர் அறிவிப்பு

10 lakh relief to sriperumbudhur sewage gas accident

author img

By

Published : Feb 14, 2021, 8:11 PM IST

Updated : Feb 15, 2021, 10:46 AM IST

20:04 February 14

சென்னை: திருப்பெரும்புதூரின் காட்ரம்பாக்கம் விஷவாயு தாக்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், காட்ரம்பாக்கம் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் கழிவுத் தொட்டியை இன்று (14.2.2021) சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த காட்ரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ், முருகன், ஆறுமுகம் ஆகிய மூன்று நபர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். 

இச்சம்பவத்தில் உயிரிழந்த த. பாக்கியராஜ், முருகன், ஆறுமுகம் ஆகிய மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். 

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Feb 15, 2021, 10:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.