ETV Bharat / city

கார் ஓட்டுநரின் கவனத்தை திசை திருப்பி நூதன கொள்ளை

தாம்பரம் அருகே கார் ஓட்டுநரின் கவனத்தை திசை திருப்பி, காரில் வைத்திருந்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை அடையாளம் தெரியாத நபர்கள் நூதன முறையில் கொள்ளை அடித்துச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நூதன முறையில் கொள்ளை
நூதன முறையில் கொள்ளை
author img

By

Published : Nov 24, 2021, 9:28 AM IST

சென்னை: தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் அன்பு நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (52). தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார். இந்த நிலையில் நேற்று (நவம்பர் 23) அவரது மனைவியின் 38 கிராம் தங்க நகையை பீர்கங்கரணை காந்தி ரோடு பகுதியில் உள்ள சிண்டிகேட் வங்கியில் அடகு வைத்துவிட்டு ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாயைப் பெற்றுள்ளார்.

அதன் பின் அவரது காரில் சீட்டில் வைத்துவிட்டுப் புறப்பட்டுள்ளார். இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் முருகேசனைப் பின்தொடர்ந்துள்ளனர்.

பீர்கங்கரணை பேரூராட்சி அலுவலகம் அருகே காரை மடக்கிய, இரண்டு நபரில் ஒருவர் முருகேசனிடம் உங்களது பணம் காரிலிருந்து கீழே விழுந்துள்ளது எனக் கூறியுள்ளார். ஆனால் முருகேசன் அது எனது பணம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

அப்போது மற்றொரு நபர் வலதுபக்கம் கார் கதவைத் திறந்து பணத்தை எடுத்துக்கொண்டார். அதன் பின் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களும் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த முருகேசன், இது குறித்து பீர்கங்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: Tomato Price - பசுமை பண்ணை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி - அமைச்சர் ஐ.பெரியசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.