சென்னை: பொறியியில் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையில் www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
பொறியியல் படிப்பில் சேருவதற்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி மாலை 5.30 மணி வரையில், பொறியியல் கலந்தாய்விற்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 80 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
மேலும் கலந்தாய்வில் பங்கேற்க 1 லட்சத்து 10 ஆயிரத்து 285 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர். 91 ஆயிரத்து 797 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் முறையிட்டாரா விபின்?