சென்னை விமான நிலையத்தில் சுங்க அலுவலர்கள் பயணிகளின் உடைமைகளை சோதித்தனர். அப்போது ஏழு பேர் தங்களின் உள்ளாடைகளில் மறைத்துவைத்து தங்கத்தை சட்டவிரோதமாக கொண்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் சென்னையை சோ்ந்த முகமது அலி(28), அன்சாரி(34), ராமநாதபுரத்தைச் சோ்ந்த சையது முகமது(34), பாரூக்(43), திருச்சியைச் சோ்ந்த சையத் அப்தகீா்(44) மதுரையைச் சோ்ந்த முகமது அலி(32), சிவகங்கையைச் சோ்ந்த அப்துல் ஹக்கீம்(32) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.94.2 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்தமுயன்ற தமீம் அன்சாரி (40) என்பவரிடமிருந்து ரூ.7 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலா் வெளிநாட்டு பணத்தையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தமீம் அன்சாரி சென்னையை சேர்ந்தவராவார். ஆக ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நடுவானில் விமானத்தில் தீ விபத்து: 159 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்பிழைப்பு!