ETV Bharat / city

சென்னையில் ரூ.47.73 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

author img

By

Published : Feb 7, 2022, 9:12 PM IST

சென்னை விமானநிலையத்தில் இன்று ரூ.47.73 லட்சம் மதிப்புள்ள 1.09 கிலோ கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

1 09 kg gold
1 09 kg gold

சென்னை: துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் இன்று(பிப்.7) சென்னை விமான நிலையம் வந்தது. இந்த விமானப் பயணிகளிடம் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 38 வயது மதிக்கத்தக்கவருடைய உடைமைகளில் தங்கம் கடத்திவரப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த காவலர்கள் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதோபோ இலங்கையிலிருந்த வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண் பயணியிடம் இருந்து 123 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரும் கைது செய்யப்பட்டார். முதல்கட்ட தகவலில், இருவரிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 1.09 கிராம் என்பதும், இதன் மதிப்பு 47.73 லட்சம் என்பதும் தெரியவந்துள்ளது. முன்னதாக சென்னையிலிருந்து இலங்கைக்கு விமானம் மூலம் கடத்த முயன்ற ரூ.24.29 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னையில் ரூ.24.29 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.