சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி ஆன்லைன் விற்பனையின் அசுரர்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் தாறுமாறான தள்ளுபடி விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 8ஆம் தேதி நள்ளிரவு தொடங்கிய இந்த தள்ளுபடி விற்பனை வரும் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விற்பனையில் குறிப்பாக மொபைல் ஃபோன்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் மீது சுமார் 90 சதவீதம் வரையில் தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குறைந்த பட்ஜெட்டில் ஸ்மார்ட் ஃபோன் வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் கீழே இருக்கும் லிஸ்டில் உள்ள ஃபோன்களை தேர்வு செய்யலாம். அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையில் சுமார் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலான விலைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள மொபைல் ஃபோன்களை பார்க்கலாம்.
இதையும் படிங்க: அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களோடு பார்ட்னர்ஷிப்: நீங்களும் ஆகலாம் லட்சாதிபதி.!
அமேசான் (Amazon) நிறுவனத்தின் தள்ளுபடி விற்பனையில் உள்ள மொபைல் ஃபோன்கள் (ரூ. 5000 முதல் ரூ.10000 வரை) |
|
|
|
|
பிளிப்கார்ட் (flipkart) நிறுவனத்தின் தள்ளுபடி விற்பனையில் உள்ள மொபைல் ஃபோன்கள் (ரூ. 5000 முதல் ரூ.10000 வரை) |
|
|
|
|
|
|
|
|
|
ரியல்மி, சாம்சங், போகோ உள்ளிட்ட 4 மொபைல் ஃபோன் நிறுவனங்களின் குறிப்பிட்ட சில ஃபோன்கள் தள்ளுபடி விற்பனை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. குறைந்த பட்ஜெட்டில் மொபைல் ஃபோன் வேண்டும் என நினைப்பவர்கள் இதில் உள்ள ஃபோன்களில் பிடித்தமானதைத் தேர்வு செய்யலாம். இவற்றுடன் ஸ்மார்ட் வாச், ஹெட் ஃபோன்ஸ், பவர் பேங்க், பென் ட்ரைவ், ஹாட்டிஸ்க் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொருட்கள் தள்ளுபடி விற்பனையில் கிடைக்கின்றன.
வாடிக்கையாளர்கள் இது தொடர்பான கூடுதல் தகவல்களை அந்நிறுவனங்களின் இணையதள பக்கத்திற்குச் சென்று பார்த்து உங்களது பட்ஜெட்டிற்குள் தேவைப்படும் பொருட்களை வாங்கி, பண்டிகை நாட்களை மகிழ்ச்சியோடு கொண்டாடவும். இந்த பண்டிகை கால தள்ளுபடி விற்பனையைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடிகள் குறித்து சைபர் க்ரைம் வல்லுநர் அளித்த சிறப்புப் பேட்டியைக் கீழே உள்ள லிங்கில் சென்று பார்க்கலாம்.
இதையும் படிங்க: அதிரடி ஆஃபர்களுக்கு நடுவே பதறவைக்கும் மோசடிகள்.. பண்டிகை பர்சேஸில் கவனம் தேவை..!