ETV Bharat / business

நீண்ட கால முதலீட்டின் மூலம் நிலையான வருவாய் ஈட்ட விருப்பமா? - யூலிப்களின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்...! - நிலையான வருவாய்

யூலிப்களில் முதலீடு செய்பவர்கள், இரட்டை நன்மைகளை பெறலாம். யூலிப்கள் வருமான வரி விலக்கு, முதிர்வுக்குப் பிறகும் தவணை முறையில் பாலிசித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 15, 2022, 9:24 PM IST

ஹைதராபாத்: தற்போதைய காலகட்டத்தில் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள், அதனுடன் பல்வேறு பயனுள்ள ஸ்கீம்களையும் பாலிசிதாரர்களுக்கு வழங்குகின்றன. இதனால் காப்பீட்டுத் திட்டங்கள் சிறந்த முதலீட்டுத் திட்டங்களாக பார்க்கப்படுகின்றன. இதில் பலராலும் விரும்பப்படும் ஒரு சிறந்த காப்பீட்டு திட்டம் யுலிப்கள் (ULIP- Unit linked investment policies) ஆகும். இந்த யூலிப்களில், பாலிசிதாரர்கள் செலுத்தும் பிரீமியத்தின் ஒரு பகுதி, பங்குச் சந்தையில் அல்லது மியுட்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் பாலிசிதாரர்களுக்கு அவர்களது தினசரி கண்காணிப்பின் கீழ், வருவாய் ஈட்டப்படுவது புலனாகிறது. நீண்ட கால பணப்பலன்களை விரும்புவோர் இந்த யூலிப்களில் முதலீடு செய்கிறார்கள். அதேநேரம் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்கள் குறித்து கவனம் கொள்வோர் இந்த யூலிப்களில் முதலீடு செய்ய தயங்குவார்கள். ஆனால், பங்குச்சந்தையில் நுழைய சரியான நேரம் என்பது இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது யூலிப்கள், முதலீடு, காப்பீடு மற்றும் வரி விலக்கு தவிர, மேலும் சில நன்மைகளையும் வழங்குகின்றன. பாலிசிதாரர்கள் தங்கள் முதலீடு மற்றும் பாதுகாப்புத் திட்டங்களுக்குப் பொருத்தமான பாலிசியை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் வழங்கப்படுகிறது. தங்கள் தேவைக்கு ஏற்ப முதலீட்டுத் திட்டங்களை மாற்றிக் கொள்ளும் வசதியையும் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. பாலிசிதாரர்கள் வருவாயை அதிகரிக்க புதிய முதலீட்டு திட்டங்களை மாற்றிக் கொள்ளலாம். பாலிசிகள் முதிர்ச்சியடையும் போது ஒரே நேரத்தில் பலன்களைப் பெறலாம்.

யூலிப்கள் மாதந்தோறும் அல்லது காலாண்டு அல்லது அரையாண்டுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் பிரீமியங்களைச் செலுத்த உதவும். வருமானம் மற்றும் பிற செலவுகளின் அடிப்படையில், பிரீமியத்தை நிர்ணயிக்கலாம். யூலிப்களின் கீழ் பிரீமியங்களை சரியாக செலுத்தி வருவது நல்ல வருமானத்திற்கு வழிவகுக்கும். யூலிப்கள் முதிர்ச்சியடைந்த பிறகு, பாலிசிதாரருக்கு பாலிசித் தொகையை மொத்தமாகக் கோரவோ அல்லது தவணை முறையில் திரும்பப் பெறவோ சுதந்திரம் வழங்கப்படுகிறது. எனவே, இந்த முதலீடு முதிர்வுக்குப் பிறகும் சந்தையில் தொடரலாம், அது தொடர்ந்து வருமானத்தை ஈட்டும். இதன் மூலம் அதிக வருமானம் பெற முடியும். நாம் நிலையான வருமானத்தைப் பெற விரும்பினால், முதலீடுகளை நீண்ட காலத்திற்கு தொடர வேண்டும். யூலிப்கள் அதுபோன்ற ஒரு நீண்ட கால முதலீட்டு திட்டம்தான். இதில், சந்தை ஏற்ற இறக்கம் மற்றும் நிதி உறுதியற்ற தன்மையுடன் வரும் ஆபத்துக் காரணிகளை குறைக்க முடியும்.

தங்கள் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய காப்பீடு செய்வோர், குடும்ப உறுப்பினர்களுக்கு நிலையான வருமான ஆதாரத்தையும் உருவாக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு யூலிப்கள் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். யூலிப்கள் வருமான வரி விலக்கு கோருவதற்கான வாய்ப்பையும் வழங்குகின்றன. யூலிப்களின் கீழ் செலுத்தப்படும் பிரீமியம் தொகை, ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு பெற தகுதியுடையது. இதன் மூலம் பெறப்படும் பணப்பலன்களும் கூட வரி விலக்குகளுக்குத் தகுதியுடையவை.

இதையும் படிங்க: சிக்கல்கள் இல்லாமல் வீட்டுக்கடன், வாகனக்கடன் பெறுவது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.