ETV Bharat / business

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்! - இன்றைய தங்கம் வெள்ளி விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ரூ.4,969 என விற்பனையாகிவருகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

Gold
Gold
author img

By

Published : Apr 21, 2022, 12:46 PM IST

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.4,969 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 22 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,368 என விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.73.30 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ வெள்ளி ரூ.73,300க்கு விற்பனையாகிவருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,752 ஆகவும், 24 காரட் தூயத் தங்கம் சவரன் ரூ.42,944 ஆகவும் உள்ளது.

அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் உலக நாடுகளின் பொருளாதார சிக்கல், பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கங்கள் உள்ளிட்ட காரணிகள் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படுகிறது.

இதற்கிடையில் தங்கத்தில் இந்தியர்கள் முதலீடு செய்துவருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரங்களில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில் ஒரு சவரன் ரூ.39,752 ஆக உள்ளது. முன்னதாக, தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை 1ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,006 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு சவரன் ரூ.40,048 என விற்பனையானது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.