ETV Bharat / business

இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி 11.66 விழுக்காடு அதிகரிப்பு - Coal Production Goes up

இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி 1.66 விழுக்காடு அதிகரித்து நவம்பரில் மொத்த நிலக்கரி உற்பத்தி 75.87 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி 11.66 விழுக்காடு அதிகரிப்பு

author img

By

Published : Dec 6, 2022, 4:15 PM IST

டெல்லி: இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தி 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 67.94 மில்லியன் டன்னாக இருந்தது. இந்த அளவு 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11.66 விழுக்காடு அதிகரித்து 75.87 மில்லியன் டன்னாக உயந்துள்ளதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்படி, 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய நிலக்கரி நிறுவனம் 12.82 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. அதேசமயம் சிங்கரேணி கூலரீஸ் கம்பெனி நிறுவனமும் மற்ற சுரங்கங்களும் முறையே 7.84 விழுக்காடு, 6.87 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. நிலக்கரி உற்பத்தியில் முதன்மையான 37 சுரங்கங்களில் 24 சுரங்கங்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமாக உற்பத்தி செய்தன. ஐந்து சுரங்கங்களின் உற்பத்தி 80 முதல் 100 சதவீதம் வரை இருந்தது.

மின்சார உற்பத்திப் பயபாட்டுக்கு அனுப்பப்படுவதில், கடந்தாண்டு 60.20 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும் போது, 2022ஆம் ஆண்டு 3.55 விழுக்காடு அதிகரித்து 62.34 மில்லியன் டன்னாக உள்ளது. நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியை 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 2022ஆம் ஆண்டு நவம்பரில் 16.28 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. நவம்பர் 2021ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை விட நவம்பர் 2022ஆம் ஆண்டு ஒட்டுமொத்த மின் உற்பத்தி 14.63 விழுக்காடு அதிகமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கழுத்தை நெறிக்கும் ஆன்லைன் கடனை தவிர்ப்பது எப்படி.?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.