Stock Market: கடந்த வாரம் முழுவதும் சந்தைக்கு போதாத காலம் போல, மனிதர்கள் ராகு கேது பெயர்ச்சிக்கு காத்துக்கிடந்ததைப்போல சந்தைகளும் காத்திருந்தது, திங்கட்கிழமை தொடங்கிய சந்தை ஆரம்பத்தில் சரிவுடன் தொடங்கினாலும் பின்னர் விறுவிறுப்பெடுக்க ஆரம்பித்தது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இந்த ஒரு மாதத்தில் கச்சா எண்ணை விலை பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. உலகின் மிகப் பெரிய அராம்கோ எண்ணை வயல்கள் எண்ணை கிடங்குகள் மீது சவுதிஅரேபியாவில் ஹைதி கிளர்ச்சிப் படையினர் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். விலை உயர்ந்தாலும் இருப்புக்கு பஞ்சம் இல்லை என பொதுத்துறை எண்ணை நிறுவனங்கள் உத்தரவாதம் அளித்துவிட்டன.
நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் 2015ஆம் ஆண்டில் ஏலம் எடுத்த அலைக்கற்றைக்கான நிலுவைத்தொகை மற்றும் வரும் 2027, 2028ஆம் ஆண்டுக்கான தொகைகளாக மொத்தம் 8 ஆயிரத்து 815 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளதாக அறிக்கை மூலம் தெரிவித்தது. கடந்த 4 மாதங்களில் மட்டும் ஏர்டெல் மொத்தம் 24 ஆயிரத்து 334 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளது. இதனால் இப்பங்கின் விலை கிட்டத்தட்ட 3 விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்தது. பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் லியூசர் இணையப்போகிறது இப்படி இனிப்பு மேல் இனிப்பு செய்திகள் வந்துகொண்டே இருந்தன.
வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 231 புள்ளிகளும் நிஃப்டி 69 புள்ளிகளும் உயர்ந்தன. பார்தி ஏர்டெல், அக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, எஸ்.பி.ஐ ஆகியன லாபத்துடன் முடிந்தன. அதானி வில்மர் அப்பர் சர்க்யூட்டை தொட்டு இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது. செவ்வாயும் தரும் வருவாய் என நம்புவோமாக!.
இதையும் படிங்க: 'பொதுத்துறை வங்கிகளில் தான் மக்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்' - வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம்