டெல்லி: இந்தியாவின் அனல் மின் உற்பத்தி 16.28 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்தாண்டு நவம்பரில் 87,687 மில்லியன் யூனிட்டாக பதிவாகியுள்ளது. இந்த அளவு கடந்தாண்டு நவம்பரில் 75,412 மில்லியன் யூனிட்டாக இருந்தது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியும் இந்தாண்டு நவம்பர் மாதத்தில் 14.63 விழுக்காடு அதிகரித்து 1,18,029 மில்லியன் யூனிட்டாக உள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் 60.20 மெட்ரிக் டன்னாக இருந்த மின்சாரப் பயன்பாட்டுத் துறையின் விநியோகம் 3.55 விழுக்காடு அதிகரித்து 62.34 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
மத்திய நிலக்கரி அமைச்சகம் அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி ஒதுக்கீட்டை பற்றாக்குறை காரணமாக குறைந்துள்ளது. இருப்பினும் உயிரி எரிபொருள் உருண்டைகளை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. இந்தியா ஆண்டுக்கு 230 மில்லியன் மெட்ரிக் டன் உயிரி எரிபொருள் உருண்டைகளை உற்பத்தி செய்து வருகிறது. மின் உற்பத்தி ஆலைகளில் உயிரி எரிபொருள்களை உபயோகப்படுத்துவதன் மூலம் கார்பன் வெளியீடு குறைவாக உள்ளது. உயிரி எரிபொருள் நிலக்கரிக்கு ஈடான சக்தியை வெளியிடும்.
பல்வேறு தேசிய அனல் மின் கழக மின் உற்பத்தி ஆலைகளில் ஏற்கனவே நிலக்கரி உடன் உயிரி எரிபொருட்கள் உபயோகப்படுத்தப்பட்டுவருகிறது. நாட்டில் உள்ள அனைத்து நிலக்கரி அனல் மின் நிலையங்களிலும் 5-10 சதவீதம் உயிரி எரிபொருளை இணைத்து எரிப்பதை மத்திய மின் அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது. இந்த நடவடிக்கை, நாட்டில் உயிரி சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கான தேசிய அனல் மின் கழகத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
இதையும் படிங்க: இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி 11.66 விழுக்காடு அதிகரிப்பு