டெல்லி: இதுகுறித்து பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் மகேஷ் தேசாய் கூறுகையில், "இந்தியாவின் பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி கடந்தாண்டு மார்ச் மாதத்தில் 9.29 பில்லியன் டாலராக இருந்தது. இந்தாண்டு 11.13 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதன்படி 20 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது.
குறிப்பாக 2021-22 ஆண்டில் பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி 112.10 பில்லியன் டாலராக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 46.12 விழுக்காடு அதிகம். இதன் மூலம் கடந்த நிதியாண்டின் ஏற்றுமதி இலக்கான 107.34 பில்லியன் டாலர்களை ஏற்றுமதியை கடந்துள்ளது.
அந்த வகையில், நாட்டின் மொத்த சரக்கு ஏற்றுமதியில் பொறியியல் பொருள்களின் ஏற்றுமதியின் பங்கு 26.7 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவிற்கான பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 61 விழுக்காடு உயர்ந்து, 2.02 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. கடந்தாண்டு 1.26 பில்லியன் டாலராக இருந்தது. இது 52.8 விழுக்காடு வளர்ச்சியாகும்.
அதேபோல ஐக்கிய அரபு அமீரகத்திற்கான ஏற்றுமதி வளர்ச்சி 74.3 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவின் பொறியியல் ஏற்றுமதியில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சீனா, ஜெர்மனி, இத்தாலி, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.
ஆனால், 2021-22ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ, நைஜீரியா ஆகியவை இந்தியாவின் ஆட்டோமொபைல் பொருள்களை இறக்குமதி செய்யும் முதல் மூன்று நாடுகளாக இருக்கின்றன. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்வதை பல நாடுகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோயம்பேடு காய்கறி விலை நிலவரம்