ETV Bharat / business

சிக்கல்கள் இல்லாமல் வீட்டுக்கடன், வாகனக்கடன் பெறுவது எப்படி?

விழாக் காலங்களில் வீட்டுக்கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றை வாங்குபவர்கள், அனைத்து விவரங்களையும் வெளிப்படையாக வழங்க வேண்டும். அதேபோல், கடன் தொடர்பான அனைத்து விவரங்களையும் வங்கியிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

How
How
author img

By

Published : Oct 3, 2022, 9:47 PM IST

ஹைதராபாத்: பண்டிகை காலங்களில் வாகனம், வீடு உள்ளிட்டவற்றை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். விழாக் காலங்களில் வங்கிக்கடன் பெற்று உங்கள் வாகனக் கனவு அல்லது வீட்டுக் கனவை நிறைவேற்ற நினைத்தால், அதற்கு வங்கிகளில் முறையாக எப்படி கடன் பெறுவது? என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். முதற்கட்டமாக உங்களது தகவல்கள் மற்றும் வருவாய் தரவுகளை வெளிப்படையாக வழங்கினால், நீங்கள் எவ்வளவு தொகையை கடனாக பெற தகுதி உள்ளவர் என்பதை வங்கி தெரிவிக்கும். ஆனால், சரியாக உங்களுக்கு எவ்வளவு கடன் தொகை கிடைக்கும் என்பது, நீங்கள் இறுதியாக வழங்கும் ஆவணங்களைப் பொறுத்தது.

தனிநபர் கடன் மற்றும் அடமானக் கடன்களைப் பொறுத்தவரை, மொத்தக் கடன் தொகையும் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும், இது முழுத் தொகை (sum loan amount) என்று அழைக்கப்படுகிறது. ஆனால், வீடு மற்றும் கல்விக் கடன்களைப் பொறுத்தவரை, வீடு கட்டும் நிறுவனம் மற்றும் கல்வி நிறுவனம் அளிக்கும் தகவல்களைப் பொறுத்து, கடன் தொகை படிப்படியாக வழங்கப்படும். வீட்டுக்கடன் மற்றும் கல்விக்கடன் இரண்டுமே, பல்வேறு கட்டங்களாகவே வழங்கப்படும்.

கல்விக் கடன்களைப் பொறுத்தவரை, சில கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கும் போது, ​​வங்கிகள் கடன் தொகைகளை அவ்வப்போது மாணவர்கள் மூலமாக பெற்றுக்கொள்ளும். சில நேரங்களில், கடன் தொகையை நேரடியாக கல்வி நிறுவனங்களின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். கல்விக் கட்டணம் தவிர, மற்ற செலவுகள் தொடர்பான கடன்தொகை, கடன் பெறுபவர்களின் கணக்கில் மட்டுமே டெபாசிட் செய்யப்படும்.

உங்கள் வங்கி தொடக்கத்தில் மதிப்பீடு செய்யப்பட்ட கடன் தொகையை மொத்தமாக தரவில்லை என்றால், ஆச்சரியப்பட வேண்டாம். சில நேரங்களில், இந்த மதிப்பிடப்பட்ட கடன் தொகை குறைக்கப்படலாம். சான்றாக, வங்கி அலுவலர்கள் வீட்டுக்கடன் வழங்குவதற்கு முன், கட்டுமான வேலைகளை நேரில் ஆய்வு செய்வார்கள்.

இடம், கட்டுமானத்தின் தரம், குடியுரிமை உள்ளிட்ட அனைத்தையும் சரிபார்ப்பார்கள். இதில் அனைத்து காரணிகளும் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தால் மட்டுமே மதிப்பிடப்பட்ட கடன் தொகை முழுமையாக வழங்கப்படும்.

இதேபோல் கட்டப்பட்ட வீட்டை வாங்க கடன் வாங்கினாலும், வீட்டின் மதிப்பை ஆய்வு செய்த பிறகே, முழுத் தொகையும் வழங்கப்படும். வீட்டின் மதிப்பு, வட்டி விகிதம், கடனின் கால அளவு உள்ளிட்டவற்றைப் பொறுத்தே முழு கடன் தொகை வழங்கப்படும்.

வீடு அல்லது வாகனக் கடன் பெறுவோர், பொருளின் மொத்த விலையில் குறிப்பிட்ட தொகையை டவுன் பேமெண்ட்டாக கட்ட வேண்டும். ஒரு வீட்டின் மொத்த மதிப்பில் 80 முதல் 90 விழுக்காடு வரை வங்கிகள் கடன் வழங்கும்.

மீதமுள்ள தொகையை கடன் பெறுவோர் டவுன் பேமெண்ட்டாக செலுத்த வேண்டும். அதை செலுத்தினால் மட்டுமே கடன் தொகை வழங்கப்படும். கடன் வழங்கப்பட்ட உடனேயே வங்கிகள் வட்டியை கணக்கிடத் தொடங்கி, மாதாந்திர தவணை வசூலிக்க ஆரம்பிக்கும்.

வீடு அல்லது வாகனக் கடன்களில், சில நேரம் நோ இஎம்ஐ வசதியும் வழங்கப்படும். அதாவது குறிப்பிட்ட மாதங்கள் கழித்து, மாதத் தவணை செலுத்த அனுமதி வழங்குவர். இதுதொடர்பாக தகவல்களை முன்கூட்டியே தெளிவாக தெரிந்து வைத்துகொள்ள வேண்டும். அதேபோல், கடன் வாங்குபவரும் அனைத்து விவரங்களையும் மறைக்காமல் வங்கிகளுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் வங்கிகள் எந்தவித இடையூறும் இல்லாமல் கடன் தொகையை வழங்க ஏதுவாக இருக்கும்.

இதையும் படிங்க: மாத தவணைத் தொகையை அதிகமாக செலுத்தினால் வட்டிச்சுமையை குறைக்கலாம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.