ETV Bharat / business

முதலீட்டுத் திட்டங்களை தேர்வு செய்வது எப்படி? - நிபுணர்கள் டிப்ஸ்!

பொருளாதாரத்தின் நிலையற்றத் தன்மையை சமாளிப்பதற்கு நிதித் தேவைகளுக்கு ஏற்ப சரியான முதலீட்டுத் திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

How
How
author img

By

Published : Dec 22, 2022, 6:24 PM IST

ஹைதராபாத்: அண்மைக்காலமாக வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. அதேநேரம் உலகளவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையால் இந்தியாவில் பெருமளவு பாதிப்பு ஏற்படாது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பொருளாதாரத்தின் நிலையற்றத் தன்மையை சமாளிப்பதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும், நிலையான வருவாய் கிடைக்கும் வகையில் முதலீடுகளை செய்ய வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

முதலீடுகள் மற்றும் நிதித் திட்டங்கள் குறித்து அதிக கவனம் தேவை. நிதி இலக்குகளை சரியாக நிர்ணயித்தால் மட்டுமே, லாபம் தரும் முதலீடுகளை செய்ய முடியும். நீண்ட கால முதலீடுகளைத் தேர்வு செய்பவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளுக்குத் திரும்புகிறார்கள் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதில் சில காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும். நிதித் திட்டமிடலும், முதலீடுகளும் ஒன்றல்ல. முதலீடுகள் என்பது நிதி திட்டமிடலின் ஒரு பகுதியாகும்.

நம் வாழ்வில் பல்வேறு கட்டங்களில் உள்ள தேவைகளுக்கு ஏற்ப நிதி மேலாண்மையைத் திட்டமிட வேண்டும். இது சற்று கடினமான விஷயம்தான். ஆனால், நம் தேவைகளை அறிந்து வைத்திருப்பது முதலீட்டுத் திட்டங்களை தேர்வு செய்ய உதவும். குறுகிய கால, நீண்ட கால நிதி இலக்குகளை அடைய உதவும். சரியான முதலீட்டுத் திட்டத்தை தேர்வு செய்யாவிட்டால் வருவாய், செலவுகள், முதலீடுகள் மீது நமக்கு எந்தவித கட்டுப்பாடும் இருக்காது.

முதலில் வாழ்க்கையில் உள்ள மிக முக்கியமான நிதி இலக்குகளை அடையாளம் காண வேண்டும். வீடு வாங்குவது, பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் உள்ளிட்டவற்றிற்குத் தேவைப்படும் நிதியை மதிப்பிடுவது மிக முக்கியம். இவற்றில் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க வேண்டும். எந்த தேவையை உடனடியாக செய்ய வேண்டும்? எதை தள்ளிப்போட வேண்டும்? என்பதை முடிவு செய்ய வேண்டும். இதை உங்களிடம் தற்போதுள்ள சேமிப்பு மற்றும் எதிர்கால முதலீட்டுத் திட்டங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கலாம்.

எல்லா நிதித் தேவைகளுக்கும் ஒரே கால அளவு இருக்காது. சான்றாக 5 வருடங்களில் வீடு வாங்க வேண்டும் என நினைப்பார்கள், பிள்ளைகளின் படிப்புச்செலவு என்பது 10 முதல் 15 ஆண்டுகள் வரை நீடிக்கலாம். இதில், குறுகிய கால நிதி இலக்குகளுக்காக நீண்ட கால முதலீடுகளை தள்ளிப் போடக் கூடாது. சான்றாக, குழந்தைகளின் கல்விச் செலவை காரணமாக வைத்துக்கொண்டு, ஓய்வுகாலத்திற்கு முதலீடு செய்யாமல் இருக்கக்கூடாது.

ஈக்விட்டி ஃபண்டுகள் என்பது அதிகமான வருவாயை வழங்கும் நீண்ட கால முதலீடுகள். நேரடியாக பங்குகளில் முதலீடு செய்வதற்கோ அல்லது பங்கு நிதிகள் மூலம் மறைமுகமாக சந்தையில் முதலீடு செய்வதற்கோ இது பொருந்தும். குறுகிய மற்றும் நடுத்தர கால இலக்குகளுக்கு, குறைந்த ரிஸ்க்குகள் கொண்ட வங்கியின் நிரந்தர வைப்புத்தொகை, தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள், பத்திரங்கள் போன்றவற்றை தேர்வு செய்யலாம். இவற்றில் முதலீடு செய்யும்போது பணமதிப்பு, வரிச்சுமை, கால அளவு உள்ளிட்டவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நிதி இலக்குகள், தேவைகளின் முன்னுரிமை உள்ளிட்டவற்றை முடிவு செய்த பிறகு, எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்று சிந்தியுங்கள். ஒவ்வொரு செலவையும் பணவீக்கத்துடன் கணக்கிட வேண்டும். சான்றாக பிள்ளைகளின் திருமணத்திற்கு 25 லட்சம் ரூபாய் செலவாகும் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு சராசரியாக 5 சதவீத பண வீக்கத்துடன், 21 ஆண்டுகளுக்குப் பிறகு, மகளின் திருமணத்திற்கு இப்போது 25 லட்சம் ரூபாய் செலவாகும் என்று வைத்துக்கொள்வோம்.

அதற்கு சராசரியாக 5 சதவீத பணவீக்கம் என்று கணக்கிட்டால், 21 ஆண்டுகளுக்குப் பிறகு, 70 லட்சம் தேவைப்படும். குறைந்தபட்சம் 12 சதவீத வருமானம் ஈட்டும் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் மட்டுமே இந்த செலவை கையாள முடியும். ஒவ்வொரு நிதித் தேவையையும் இவ்வாறுதான் கணக்கிட வேண்டும்.

பங்குச் சந்தை, ஈக்விட்டி உள்ளிட்ட எந்த முதலீடாக இருந்தாலும், அதில் முதலீடு செய்ய உங்களுக்கு நிதி ஒழுக்கம் மற்றும் மேலாண்மை இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் முதலீடு செய்வதற்கு முன்பு, தங்களது ஆண்டு வருமானம், செலவுகள் உள்ளிட்டவற்றைப் பொறுத்து டேர்ம் பாலிசிகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க:கிரெடிட் கார்டுகளை லாபகரமாக பயன்படுத்துவது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.